Watch : யாசகம் பெற்ற பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய யாசகர்!
யாசகம் பெற்ற பணத்தை மனைவியின் நினைவு நாளையொட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய யாசகர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் மதுரையில், பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் யாசகம் பெற்று அந்த பணத்தை கொரானா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது, கொரோனா நிவாரண நிதியாக மட்டும் 42 முறை பத்தாயிரம் வீதம் 2 லட்சத்து 20ஆயிரம் ரூபாய் பொது நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
இவர்கொரானா தொற்றை தவிர்த்து 2020ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபாயும், திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றிய பூமிநாதன் குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கினார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நாளுக்கு யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொதுநல நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் மனைவி சரஸ்வதி. கடந்து 25 வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் செப்டம்பர் 25ம் தேதி காலமாகி உள்ளார். இந்த நிலையில் மனைவி சரஸ்வதியின் நினைவு நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை வருவதையொட்டி தான் யாசகமாக பெற்ற 10ஆயிரம் ரூபாய் பணத்தை முதலமைச்சரின் பொதுநல நிவாரண நிதிக்கு யாசகர் பூல் பாண்டியன் வழங்கினார். இந்த நிலையில் இன்று உசிலம்பட்டி கல்வி மாவட்டத்து மாநில அரசு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்யக்கோரி முன்னாள் வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பூல்பாண்டியை பார்த்து அவருக்கு சால்வை அறிவித்து நலம் விசாரித்தார்.