'மாஞ்சா' நூல் அறுத்து 3 வயது குழந்தை துடிதுடித்து உயிரிழந்த அதிர்ச்சி சிசிடிவி..!
சென்னை கொருக்குப்பேட்டையில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவர் தன்னுடைய மூன்று வயது மகன் அபினேஷுடன் நேற்று மாலை ஐந்து மணியளவில் தண்டையார்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கொருக்குப்பேட்டை மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ‘மாஞ்சா நூல்’ ஒன்று சிறுவனின் கழுத்தில் சிக்கியது. இதனையடுத்து வலிதாங்கமுடியாம்ல் குழந்தை அபினேஷ் துடிதுடித்துள்ளார்.
பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது அபினேஷ் உயிரிழந்தார். மூன்று வயது குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமான மாஞ்சா நூல் பயன்படுத்தியவரை காவலர்கள் தேடி வந்த நிலையில் தற்ப்போது 2 நபர்கள் கைது செய்பட்டு உள்ளனர்.