3 நாளில் 3 குழந்தைகள் பலி.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..! நெஞ்சை கலங்கடிக்கும் வீடியோ..
தூத்துக்குடி: ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மீட்புப் பணிகளை டி.வி-யில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது சிறுமி, தண்ணீர் டிரம்மில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்.
பிகில் திரைப்படம் முதல் நாள், முதல் காட்சியிலேயே படத்தை பார்த்துவிட வேண்டும் என்று நல்லாத்தூரைச் சேர்ந்தவர் இன்பராஜ். நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இவர், அவரது அனைத்து படங்களையும் முதல் காட்சியிலேயே பார்த்து விடுவார் என்று கூறப்படுகிறது. கடந்த 25ஆம் தேதி பிகில் திரைப்படத்தை பார்ப்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் 120 கிலோமீட்டர் வேகத்தில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது பூஜாஸ்ரீ என்ற குழந்தை பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது.
இதையடுத்து இதே 25ஆம் தேதி மாலை 5 40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது சிறுவன் சுர்ஜித்தை 80 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு இன்று அதிகாலை குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சுர்ஜித் உடலை இன்று நள்ளிரவு தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது
இதனை தொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன். மீன்பிடித் தொழில் செய்துவரும் இவரின் மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது). லிங்கேஸ்வரன் நேற்று இரவு வீட்டில் தன் மனைவியுடன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகளை டி.வி-யில் பார்த்துக்கொண்டிருந்தனர்.சிறிது நேரம் கழித்து தன் சிறுமியை இருவரும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால்,தனது வீட்டின் குளியலறையை திறந்து பார்த்துள்ளார். அங்கிருந்த தண்ணீர் டிரம்மிற்குள், தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் முச்சுப் பேச்சின்றி சிறுமி உயிரிழந்தது உள்ளார்
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித், பிகில் திரைப்படம் காண சென்று வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு வயது பூஜாஸ்ரீ மற்றும் தூத்துக்குடியில் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்து சிறுமி ரேவதி சஞ்சனா மூன்று நாளில் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.