"ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்க" போதையில் பெண்ணை வழிமறித்த காவலர்..! அலற வைக்கும் வீடியோ..

காவலர் குடிபோதையில் ஒரு பெண்ணை ஆபாசமாக பேசிய சம்பவம் பெரும்  பரபரப்பு ஏறபடித்துள்ளது.

First Published Sep 12, 2019, 12:55 PM IST | Last Updated Sep 12, 2019, 12:55 PM IST

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சரண்யா (35). இவர் கீரணத்தத்தில் உள்ள தனது தாயாரை பார்க்க இருசக்கர வாகனத்தில் தனியாக சென்று கொண்டிருந்தார். அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை தாண்டி சென்றபோது, போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளார்.

இதனை கண்டு பயந்து போன திகைத்து போன சரண்யா வாகனத்தை வேகமாக இயக்கினார். ஆனால், அந்த பெண்ணை வழிமறித்த காவலர் ஏய் நீ அழகாக இருக்கிறாய்... உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது என கூறிக்கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதனையடுத்து, பயந்து போன சரண்யா கடைக்குள் போய் தஞ்சம் அடைந்தார். பின்னர், சரண்யா தனது கணவர் ரவிக்குமாருக்கு செல்போன் மூலம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சரண்யாவின் கணவர் ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்தனர். அவர்கள் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டு வந்து வாக்குவாதம் செய்தனர். அப்போது போலீஸ்காரர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. போலீஸ் சீருடையில் இருப்பதால் அடிக்காமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணையில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பெயர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, குடிபோதையில் பெண்ணை ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பிரபாகரனை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டனர்.