Watch : தீபாவளி முடிந்து ஊர் திரும்பும் மக்கள்! - செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் அவ்வப்போது வாகன நெரிசல் மிதமான சீரான வேகத்தில் வாகனங்கள் இயக்கம்.
 

First Published Oct 26, 2022, 9:42 AM IST | Last Updated Oct 26, 2022, 9:42 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. தென் மாவட்டங்களுக்கு
தீபாவளி பண்டிகையை கொண்டாடி மக்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளுக்கு வாகனங்களில் திரும்பிக்
கொண்டிருக்கின்றனர். அதிக அளவில் கார்கள் இரு சக்கர வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் செங்கல்பட்டு சுங்கச்சாவடி அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. வேலை நாட்கள் மேலும் நாளை வேலை நாள் என்பதால் தொழிற்சாலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிவோர் மருத்துவம் உள்ளிட்ட இதர பணிகளுக்கு செல்பவர்களும் இன்று இரவே சென்னை திரும்ப வேண்டிய நிலை உள்ளது. அதிக அளவில் வாகனங்கள் ஒரே நேரத்தில் வரும்
காரணத்தினால் அவ்வப்போது கூட்ட நெரிசல் ஏற்படுகிறது கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் செங்கல்பட்டு சுங்கச்சாவடியில்
அதற்கான ஏற்பாடுகளை காவல்துறை செய்துள்ளது தடையின்றி வாகனங்கள் செல்ல காவல் துறை முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
 

Video Top Stories