VIDEO | விஜய் அரசியல் பிரவேசமா? - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில்!

நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல், நைசாக நிழுவி பதில் அளிக்காமல் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடந்து சென்றார்.
 

First Published Jun 29, 2023, 10:02 AM IST | Last Updated Jun 29, 2023, 10:02 AM IST

விழுப்புரம் மாவட்டம் பரனுர் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி நிர்வாகியான காமராஜ் என்பவரது திருமணத்திற்கு விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டார். மணமக்கள் சார்பாக ஐந்து பேருக்கு தையல் இயந்திரமும் 149 பெண்களுக்கு அரிசி மற்றும் புடவையும் 149 ஆண்களுக்கு அரிசி மற்றும் வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை அவர் வழங்கினார். மேலும், விழா மேடையில் ஆண் குழந்தை ஒன்றிற்கு தளபதி எனவும் பெயர் சூட்டினார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரை சூழ்ந்துகொண்டு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அப்போது, 234 தொகுதிகளில் சேர்ந்த மாணவர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தியது அரசியல் முன்னோட்டமான என கேள்வி எழுப்பினர்.

அதற்கு எப்பொழுதும் விஜய் அவர்கள் செய்வதுதான் என கூறினார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடப்படுமா என கேட்டதற்கு பதில் அளிக்காமல் வெகு தூரத்தில் இருந்து நான் திருமண நிகழ்விற்கு வந்தேன் எனக்கூறி நைசாக நிழுவினார்.

Video Top Stories