Watch : பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தல் - விழுப்புரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பில் அனைத்துப் பொருட்களுடன் தேங்காயையும் சேர்த்து வழங்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 

First Published Jan 5, 2023, 1:00 PM IST | Last Updated Jan 5, 2023, 1:00 PM IST

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக, பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜக விவசாய அணி மாநிலப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும். விழுப்புரம் அடுத்த ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்று அரசு மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

Video Top Stories