Asianet News TamilAsianet News Tamil

விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற காவலரை கன்னத்தில் அறைந்த மூதாட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் கன்னத்தில் மூதாட்டி ஒருவர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த செக்கடிகுப்பம் கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வட்டாட்சியர் அலெக்ஸாண்டர் தலைமையில் இன்று அவலூர்பேட்டை காவல் துறையினர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது வீட்டின் உரிமையாளரான மூதாட்டி காவல் துறையினரை திடீரென எழுந்து  கன்னத்தில் அறைந்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வீடு இடிக்கப்படுவதற்கு வீட்டின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மூதாட்டியை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் படுத்திருந்தவரை வேறு இடத்திற்கு செல்ல எழுப்பிய போது மூதாட்டி திடீரென பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம்  குறித்து  அவலூர்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video Top Stories