மூன்றாக உடைந்தது வேலூர்.. ஆம்பூர் பிரியாணி சூப்பர்..! எடப்பாடி பெருமிதம்!! வீடியோ..

தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களையும் முதல்வர் பழனிசாமி இன்று ஒரே நாளில் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

First Published Nov 28, 2019, 6:38 PM IST | Last Updated Nov 28, 2019, 6:38 PM IST

நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதே போல திருநெல்வேலி மாவட்டமும் இரண்டாக பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி என உருவாக்கப்பட்டது. 

மாவட்டங்களுக்கான தொடக்க விழா முதல்வர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூர், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களையும் முதல்வர் பழனிசாமி இன்று ஒரே நாளில் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் மாவட்டகளின் வளர்ச்சி பற்றியும் குறிப்பாகக  ஆம்பூர் பிரியாணி பற்றி புகழந்து பேசியனர் பின்னர்  ,  ராணிப்பேட்டை தொடக்க விழாவில் உரையில் தொழி வளர்ச்சியை பற்றி பேசினார் இந்த விழாவில் ,துணை முதல்வர் பன்னீர் செல்வம்,  அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் திரளாக கலந்து கொண்டுனர். 

முன்னதாக கடந்த 22 ம் தேதி தென்காசி மாவட்டத்தை தொடங்கி வாய்த்த முதல்வர் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories