ஆம்பூர் அருகே பயங்கரம்.. 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..! மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ..

ஆம்பூர் அருகே பயங்கரம்.. 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..! மனதை பதைபதைக்க வைக்கும் வீடியோ..

First Published May 6, 2019, 5:44 PM IST | Last Updated May 6, 2019, 5:44 PM IST

ஆம்பூர் அருகே கார் மற்றும் லாரி மோதி கொண்ட கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு குடும்பம் பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்தனர். அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது

காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறிய அந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

மிக வேகமாக வந்த கார்,சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் அதில் பயணித்த 4 ஆண்கள் இரண்டு பெண்கள்

ஒரு குழந்தை என ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 7 பேரின் உடல்களை மீட்டு

பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Video Top Stories