திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வந்த ஆமைக்குஞ்சுகள் பறிமுதல் - இரண்டு பயணியிடம் அதிகாரிகள் விசாரணை

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ஆமை குஞ்சுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பயணிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First Published Jun 24, 2023, 6:38 PM IST | Last Updated Jun 24, 2023, 6:38 PM IST

கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமான மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 2 பயணிகள் மறைத்து எடுத்து வந்த 6850 ஆமைக்குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த நிலையில் தற்போது ஆமைக்குஞ்சுகள் கடத்தி வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories