சாகசம் என்ற பெயரில் பைக்கில் வானவேடிக்கை காட்டிய இளைஞர்கள்; போலீசாரின் அதரிடி வேட்டையில் 3 பேர் கைது

திருச்சியில் பைக் வீலிங் என் பெயரில் இருசக்கர வாகனத்தில் வானவேடிக்கை காட்டிய 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

First Published Nov 13, 2023, 8:45 PM IST | Last Updated Nov 13, 2023, 8:45 PM IST

தீபாவளி பண்டிகை நேற்று நவம்பர் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

தீபாவளி பண்டிகை காலத்தில் சந்தோஷங்கள் ஒரு பக்கம் இருக்க இன்றைய இளைஞர்கள் சாகசம் என்ற பெயரில் உயிரை பணயம் வைத்து பைக் சாகசத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருச்சி புறநகர் பகுதியில்  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீலிங் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் முன் பக்கம் வைத்து வெடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன்படி ஒரு இளைஞர் வானத்தில் சென்று வெடிக்கக் கூடிய வெடியை இரு சக்கர வாகனத்தின் முன் கட்டி அதனை பற்ற வைத்து இரண்டு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இந்த வான வேடிக்கைகள் வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை அவர்களே படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சரவெடியை கொளுத்தி அதனை சுழற்றி சுழற்றி வெடிக்க கூடிய காட்சியும்  பதிவிட்டுள்ளனர். 

ஏற்கனவே காவல்துறை சாகசம் என்ற பெயரில் வீலிங்க் செய்யக்கூடாது என கடுமையான பல உத்தரவை பிறப்பித்து நடவடிக்கை எடுத்து  வருகிறது. இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை வெடித்தபடி சாகசம் நிகழ்த்திய 21 முதல் 24 வயதிற்கு உட்பட்ட 3 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Video Top Stories