திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட கட்டு கட்டான அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரகசிய தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட 74 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First Published Jan 9, 2023, 11:18 AM IST | Last Updated Jan 9, 2023, 11:18 AM IST

தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய சர்வதேச விமான நிலையமான திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அதிக அளவு பயணிகள் வருகை தருகின்றனர். 

இந்த நிலையில் சுங்கத்துறை வாண் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிங்கப்பூரிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த ஸ்கூட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியை சோதித்தனர். அப்போது அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த Rs.74,19,000 மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் (வெளிநாட்டு கரன்சி) கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்த ஆண் பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடத்திவரப்பட்ட பணம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்த கடத்திவரப்பட்டதா ? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

Video Top Stories