திருச்சி புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள்; அமைச்சர் நேரு நேரில் ஆய்வு

திருச்சியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

First Published Oct 23, 2023, 2:00 PM IST | Last Updated Oct 23, 2023, 2:00 PM IST

திருச்சியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டம்,  பஞ்சப்பூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Video Top Stories