Asianet News TamilAsianet News Tamil

Watch : அண்ணாமலை கூறிய சொத்துகளை அவரே விற்றுக்கொடுக்கட்டும்! நான், புத்தகம் வாங்கி தருகிறேன்! அன்பில் மகேஷ்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய 1023 கோடி சொத்துகள் என்னிடம் இருந்தால், அதை அவரே விற்றுகொடுக்க வேண்டுகிறேன் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தில், அரசு பள்ளிகளுக்கு புத்தங்களை வாங்கித் தருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார், இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலம் மற்றும் நம்பர் ஒன் முதல் முதலமைச்சர் என இரண்டு வருடத்தில் இவ்வளவு பெரிய மாற்றங்களை நம் முதல்வர் முக ஸ்டாலின் செய்துள்ளார்.

ஒரு கட்சியின் மாநில தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள பட்டியலில் தனக்கு 1023 கோடிக்கு சொத்து மதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதை நிரூபிக்கவில்லை என்றால் 500 கோடி அபராதம் தர வேண்டும் என தலைமை கழகத்திலிருந்து அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.



1023 கோடி சொத்து இருத்தால் அதை அவரே விற்று கொடுக்கட்டுன். தான், ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள 38ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு, தலா இரண்டரை லட்சத்திற்கு அந்த பணத்தை வைத்து புத்தகம் (நூல்கள்) வாங்கி கொடுக்கிறேன் என்றார்.

இந்த விழாவில் தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக், முன்னாள் எம்எல்ஏ சேகரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Video Top Stories