அமைச்சர் நேருவின் பேச்சை கேட்க வந்த பாம்பு; காலால் மிதித்து கொன்ற தொண்டர்

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் போது பாம்பு நுழைந்ததால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் சாதாரணமாக பாம்பை காலால் மிதித்து கொன்றார்.
 

First Published Oct 10, 2022, 10:10 PM IST | Last Updated Oct 10, 2022, 10:10 PM IST

திருச்சி, மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. 349.98 கோடி ரூபாய் செலவில் முனையம் அமையவுள்ள நிலையில், அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நேரு தலைமை தாங்கி விழாவை நடத்தினார்.

இந்நிலையில் அமைச்சரின் கூட்டத்தில் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. பாம்பை கண்டு கட்சியினர் பதறிய நிலையில், தொண்டர் ஒருவர் மட்டும் பதற்றமடையாமல் அந்த பாம்பை காலால் மிதித்தே கொலை செய்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

 

Video Top Stories