Watch : திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக-வினர் கைது!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
 

First Published Oct 19, 2022, 6:36 PM IST | Last Updated Oct 19, 2022, 6:36 PM IST

சென்னையில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, பல்வேறு திருச்சியில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி மாநகர மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு தலைமையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சீனிவாசன், உட்பட பலர் தமிழக அரசை கண்டித்தும், கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.