VIDEO | ஏமாற்று பேர்வழிகளிடம் பணத்தை இழந்த பெண்!- நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி!

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்ணை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

First Published Jun 20, 2023, 10:10 AM IST | Last Updated Jun 20, 2023, 10:10 AM IST

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த இடையாற்று மங்களத்தை சேர்ந்தவர் அமலா சாந்தினி. இவரது கணவர் செல்வகுமார். அமலா சாந்தினி வாரிசு சான்றிதழ் வாங்குவதற்காக பெட்டவாய்த்தலையை சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 1.90 லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதே போல் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெட்டிசன் காமராஜ் என்பவரிடம் 5.75 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்ததாக கூறப்படுகிறது.

இந்த இருவர் மீதும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமலா சாந்தினி மண்ணென்னை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு அவருக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றனர்.



இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories