மலர் தூவி, பூஜை செய்து காவிரி நீரை உணர்ச்சிபொங்க வரவேற்ற விவசாயிகள்

மேட்டூர் அணை கடந்த 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட நிலையில், இன்று காலை முக்கொம்பு மேலணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

First Published Jun 15, 2023, 4:53 PM IST | Last Updated Jun 15, 2023, 4:53 PM IST

கடந்த 12ம் தேதி மேட்டூர் ஆணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து  திறக்கப்பட்ட நீரானது இன்று காலை திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலனைக்கு சுமார் 2000 கன அடியாக வந்து சேர்ந்தது. தொடர்ந்து மேல் அணைக்கு வரும் 2000 கன அடி நீர் அப்படியே குருவை சாகுபடிக்கு வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

முக்கொம்பு மேல் அணைக்கு நீர்வரத்தை ஒட்டி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் காவிரி தாய்க்கு பூஜை செய்து காவிரியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கடந்த சில மாதங்களாக வரண்டு காணப்பட்ட காவிரியில் தண்ணீர் பெருக்கெடுப்பதை ஆர்வமுடன் மக்கள் பார்த்து செல்கின்றனர்.

Video Top Stories