டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் உடுமலை அருகே போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாக தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட V வேலூரில் புதிய அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.

First Published Oct 30, 2023, 4:35 PM IST | Last Updated Oct 30, 2023, 4:35 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த வாக தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட V வேலூர் பகுதியில் புதிய அரசு மதுபானக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுற்று வட்டாரத்தில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால் புதிய மதுபான கடை திறப்பதால் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். 

பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை எனவும் மதுபான கடையை பூரணமாக அகற்ற வேண்டும் என்ற அறிவிப்பு வரும் வரை இச்சாலை மறியல் போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து உடுமலை D S P சுகுமாரன் மற்றும்  வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர்  பொதுமக்களிடம் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காமல் சாலை மறியலை கைவிடுமாறு  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Video Top Stories