மின் கம்பிகளுக்கு முட்டு கொடுத்த மின்வாரிய அதிகாரிகள்; விஞ்ஞானிகளின் செயலை அச்சத்துடன் பார்க்கும் மக்கள்
திருப்பூர் மாவட்டத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பிகளை மரக்குச்சிகளைக் கொண்டு முட்டு கொடுத்துள்ள மின்வாரியத்தின் செயலை பலரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் தெற்கு மின்வாரியத்திற்கு உட்பட்ட பெருமாநல்லூர் அடுத்த ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகில் வலசப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள சாலையில் இரண்டு மின்சார கம்பங்களுக்கு இடையிலான தூரம் மிகவும் அதிகமாக உள்ளதால் மின்சார கம்பிகள் கைகளில் தொடும் படி கீழாக சென்றுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் அப் பகுதி மக்கள் பல முறை நேரடியாக புகார் அளித்தும் எவ்வித முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்த நிலையில் ஆபத்தை உணராத நிலையில் மின்சார கம்பிகளுக்கு தாங்களாக மரக்குச்சியை வைத்து முட்டு கொடுத்து அனைவரும் வியக்கும் வண்ணம் செய்த மின்வாரிய செயலை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
காற்றடித்து அந்த கட்டை சாய்ந்தாரோ, கால்நடைகள் உரசி கட்டைகள் சாந்தாலோ அது மின் கம்பிகள் உரசி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் அதற்கு முன்னதாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.