உடுமலையில் 300 பேர் பங்கேற்ற பாரம்பரிய கும்மியாட்டம்; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்
திருப்பூர் மாவட்டத்தில் 300 பேர் பங்கேற்ற பாரம்பரிய கும்மியாட்டத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த அயலும் மீனாட்சி நகர் பகுதியில் பாரம்பரிய சக்தி கலை குழுவின் கும்மியாட்டம் நிகழ்ச்சி ஆசிரியர் மகாலிங்கம் ஏற்பாட்டில் நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேலாக பயிற்சி மேற்கொண்டு இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தாள நயத்திற்கு ஏற்றார் போலும், பாடல் இசைக்கு ஏற்றார் போலும் உற்சாக நடனமாடினர்.
பாரம்பரிய கலையான கும்மியாட்டத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொருட்டாக பல்வேறு ஊர்களிலும், அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.