இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரச்சனை.. திருப்பூரில் கல்லூரி மாணவர்கள் இடையே சண்டை - வைரல் வீடியோ

திருப்பூரில் இன்ஸ்டாகிராம் ரீல் காரணமாக ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சரமாரி தாக்குதலில் ஐந்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

First Published Aug 4, 2023, 9:29 PM IST | Last Updated Aug 4, 2023, 9:29 PM IST

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள் கார்த்திகேயன், லட்சுமணன் , பிரபாகரன், சூர்யா, அர்ஜுன், ஆகிய கல்லூரி மாணவர்கள் நண்பர்கள் தினமும் திருப்பூரில் இருந்து தனியார் பேருந்தில் கல்லூரிக்கு சென்று வருவது வழக்கம் . இந்நிலையில் கடந்த 1-ம் தேதி கல்லூரி முடிந்து தனியார் பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போது , சிலர் பேருந்தை நிறுத்தி கல்லூரி மாணவர்களான ஐந்து பேரை பேருந்தில் இருந்து இறக்கி சாலையில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் கார்த்திகேயன் படுகாயங்களுடன் திவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்,மற்ற நான்கு பேரும் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் சூர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டதற்கு, நகைச்சுவை கலந்த ஸ்மைலி இமேஜ் புகைப்படத்தை மாணவரான கிஷோர், பதிவிட்டதால் மாணவர் சூர்யா ஸ்மைலி இமேஜ் ஏன் பதிவு செய்கிறாய் என கேட்டுள்ளனர்.

ஆத்திரம் அடைந்த கிஷோர் அடியாட்களை வைத்து ஐந்து மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தாக்கிக் கொண்டது தொடர்பாக ரூரல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் ஒருவர் எடுத்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

Video Top Stories