கோவை சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு !

கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலி திருநெல்வேலி மாநகர பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை வாகனங்களில் வெடிக்கும் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மாநகரில் 2000 போலீஸ், புறநகரில் 2000 போலீஸார் என நான்காயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

First Published Oct 23, 2022, 8:41 PM IST | Last Updated Oct 23, 2022, 8:41 PM IST

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை களைகட்ட துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நான்காயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கோவையில் காரில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து திருநெல்வேலி மாநகர பகுதிகளான வண்ணாரப்பேட்டை சந்திப்பு பாளையங்கோட்டை தச்சநல்லூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை தீவிரமாக போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக நான்கு சக்கர வாகனங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ்குமார் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான்கு சக்கர வாகனங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அதிக சத்தத்தில் வெடிக்கும் பொருட்கள் போன்றவை கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்தும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், தீபாவளி பண்டிகை பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக உதவி ஆணையர் தெரிவித்தார்.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

Video Top Stories