மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு; நோயாளிகள் அவதி
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 10 மணி நேரத்துக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நோயாளிகள் பிறந்த குழந்தைகள் மிகுந்த அவதி அடைந்தனர்
தென்காசி மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தென்காசி மாவட்டத்தின் பல கிராமங்களில் இருந்து புற நோயாளிகள் வந்து செல்வதும், மேலும் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு 3 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக வரவில்லை. ஜெனரேட்டரும் வேலை செய்யவில்லை.
இதனால் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பிறந்த குழந்தைகள் என அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகினர். உள்ளே காற்றோட்டம் இல்லாததால் வெளியே குழந்தைகளை கையில் வைத்திருந்து அவர்கள் சிரமம் அடைந்தனர். ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை இவ்வளவு அலட்சியப் போக்காக செயல்படுவது பலரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் எழுந்துள்ளது.