Asianet News TamilAsianet News Tamil

முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்; பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் நூதன கோரிக்கை

கொரோனா காலத்தில் அவசர அவசரமாக பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஒப்பந்தகாலம் நிறைவு பெற்றதாகக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் செவிலியர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா கால கட்டத்தில் மருத்துவத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒவ்வொரு ஆறு மாத இடைவெளியில் பணிநீட்டிப்பு உத்தரவு பெற்ற இவர்கள், இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தனர். 

இந்நிலையில், கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து செவிலியர்களையும் டிஸ்மிஸ் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை கண்டித்தும், பணி நிரந்தரம் கோரியும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் போராட்டத்தின் 9 ம் நாளான இன்று பணி நிரந்தரம் கோரி நெல்லையில் உள்ள தபால் நிலையம் மூலம்  செவியர்கள் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video Top Stories