Video : நெல்லை அருகே சாமி சிலை சேதம்! - காவல்துறையை கண்டித்து சாலைமறியல்!

நெல்லை திருக்குறுங்குடி அருகே சாமி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
 

First Published Oct 13, 2022, 2:47 PM IST | Last Updated Oct 13, 2022, 2:47 PM IST

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூரில் உள்ள ஊய்காட்டு சுடலைமாட சுவாமி கோயிலில் உள்ளது. இங்குள்ள மாசானசுவாமி கற்சிலை கீழே தள்ளப்பட்டு, சேதப்படுத்தப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோயில் தர்மகர்த்தாவான மலையடிபுதூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்த தர்மலிங்கம் திருக்குறுங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அதே ஊரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சிலையை சேதப்படுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து திருக்குறுங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில் சாமி சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக புகார் தெரிவித்தும், சிலையை சேதப்படுத்திய நபரை கைது செய்ய கோரியும் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மலையடிபுதூரில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வள்ளியூர்-சேரன்மகாதேவி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.