Watch : நெல்லையில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தி சைக்கிள் பேரணி! ஆட்சியர் விஷ்ணு பங்கேற்பு!

நெல்லை நீர்வளம் சார்பில் 75க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் அடுத்த ஓராண்டிற்குள் 14 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும் உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியின்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்
 

First Published Sep 24, 2022, 2:10 PM IST | Last Updated Sep 24, 2022, 2:10 PM IST

நெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நெல்லை நீர்வளம் என்ற அமைப்பை உருவாக்கி தன்னார்வலர்களைக் கொண்டு நீர்நிலைகளை சுத்தப்படுத்தி வருகிறார் அதன் ஒரு பகுதியாக உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெறுகிறது முன்னீர்ப் பள்ளத்தில் தொடங்கி மேலப்பாளையம் குறிச்சி வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று சைக்கிள் ஓட்டினர் மேலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவும் இந்த பேரணியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் சேர்ந்து சில கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டினார்.

இது குறித்து மாவட் ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலக நதிகள் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நீர் நிலை பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறோம் கடந்த ஓராண்டாக நெல்லை நீர்வளம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் குறிப்பாக தாமிரபரணி ஆறு மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக அனைத்து துறைகள் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு 75க்கும் மேற்பட்ட குளங்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் முழுவதும் அடுத்த ஓராண்டிற்குள் 14 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம் அதன் ஒரு பகுதியாக இன்று சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்

இதற்கிடையில் பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட விழிப்புணர்வு பதாகையில் விழிப்புணர்வு வாசகங்கள் தமிழில் எழுதப்படாமல் முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்ததால் இந்த பேரணியை பார்த்த பொதுமக்கள் எதுவும் தெரியாமல் குழப்பம் அடைந்தனர்.
 

Video Top Stories