Watch : நெல்லையில் திமுக MP ஆ.ராசா உருவபொம்பை எரிக்க முயற்சி! - இந்து மக்கள் கட்சியினர் கைது!

நெல்லையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ராசா உருவ பொம்மை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் கைது
 

First Published Sep 27, 2022, 2:55 PM IST | Last Updated Sep 27, 2022, 2:55 PM IST

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா தமிழகத்தின் விலைவாசி உயர்வை மறைக்கும் விதமாகவும் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் இந்து மக்களை அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டிய இந்து மக்கள் கட்சியினர் அவரது உருவமையை எரிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இந்து மக்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து அக்கட்சி மாவட்ட தலைவர் உடையார் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்த போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றியதோடு இந்து மக்கள் கட்சியினர் கைது செய்தனர் அப்போது இந்து மக்கள் கட்சியினர் ராசா மற்றும் திமுகக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.