Watch : நெல்லையில் அதிமுகவினர் போராட்டம்! - நடுவழியில் சிக்கிய ஆம்புலன்ஸ்- பயணிகள் அவதி!

நெல்லையில் அதிமுகவினரின் போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கி திணறியது. நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர்.
 

First Published Oct 19, 2022, 2:15 PM IST | Last Updated Oct 19, 2022, 2:15 PM IST

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்க கோரி அதிமுக எடப்பாடி அணியினர் அமளியில் ஈடுபட்டனர் தொடர்ந்து இருக்கை ஒதுக்க கோரியும் அதிமுகவினருக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு வழங்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி அதிமுக எடப்பாடி அணி சார்பில் நடைபெற இருந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து தடையை மீறி இன்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினரை சென்னையில் போலீசார் கைது செய்ததனர்.

இதனை கண்டித்து நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை முன்பு அதிமுக நெல்லை மாவட்ட செயலாளர் கணேச ராஜா தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீபாவளி பண்டிகை விற்பனை நடந்து வரும் நிலையில் வண்ணாரப்பேட்டை பகுதியில் திடீரென அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த போக்குவரத்து நெரிசலால் அந்த வழியாக வந்த மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கியது. வாகன ஓட்டிகள் வழி விட முயன்றும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றப்பட்டு வந்ததால் ஆம்புலன்சுகள் எளிதில் நெரிசலை கடந்து செல்ல முடியாமல் திணறியது. பின்னர் ஒருவழியாக ஒரே ஒரு ஆம்னி பேருந்து மட்டும் கடும் போராட்டத்துக்கு பிறகு நெரிசலை கடந்து சென்றது.

தொடர்ந்து மாநகர காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பகுதியில் குவிக்கப்பட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

Video Top Stories