நெல்லை பேருந்துநிலைய கழிவறையில் வழுக்கி விழுந்த நபருக்கு கை உடைந்த பரிதாபம்! - பொதுமக்கள் அதிர்ச்சி

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் தண்ணீர் தேங்கி இருந்ததால் பயணி ஒருவர் அதில் வழுக்கி விழுந்து இடது கை உடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

First Published Oct 21, 2022, 3:49 PM IST | Last Updated Oct 21, 2022, 3:49 PM IST

மதுரை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் வினோத் இவர் தொழில் விஷயமாக நெல்லை வந்துள்ளார் . அவர் அங்குள்ள மாநகராட்சி கழிவறைக்கு சென்ற போது கழிவறையில் போதிய சுத்தம் இல்லாமல் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி இருந்ததாலும் கால் மிதியடி எதுவும் இல்லாமல் இருந்ததாலும் கழிவறை சென்ற வினோத் எதிர்பாராத விதமாக அங்கு வழுக்கி விழுந்துள்ளார்.

இதனால், அவரது இடது கையில் எலும்பு உடைந்துள்ளது. அங்கிருந்த மற்ற பயணிகள் அவரை அங்கிருந்து மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது தான் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து புதுப்பிக்கப்பட்டு தற்பொழுது மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் அங்கு உள்ள கழிவறைகள் எதுவும் சுத்தமான முறையில் இல்லாமல் இருப்பதாகவும் அதிகமான துர்நாற்றம் வீசி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்சி வருகின்றனர். மேலும் அவருக்கு முதல் உதவி செய்வதற்கோ அங்கு போதிய வசதி இல்லை என்றும் கூறப்படுகிறது ஒரு மணி நேரத்துக்கு மேலாக வலியில் துடித்த அவர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ஆகி வருகிறது

Video Top Stories