Watch : பொங்கல் வைப்பதில் தகராறு, இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரல்

பழையனுர் அருகே முதுவன் திடல் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

First Published Jan 4, 2023, 1:06 PM IST | Last Updated Jan 4, 2023, 1:06 PM IST

சிவகங்கை மாவட்டம் பழையனுர் அருகே முதுவன் திடல் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இதில் விநாயகர் கோயில் தரப்பு, சங்கிலி கோயில் தரப்பு, சங்கையா கோயில் தரப்பு என மூன்று பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இதில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் விநாயகர் கோயிலில் கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு பொங்கல் வைத்துள்ளனர். அப்போது மற்றொரு தரப்பும் பொங்கல் வைக்க முயன்றனர்.இரு தரப்பும் பொங்கல் வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த விறகு கட்டைகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பாண்டி மற்றும் கண்ணன் ஆகியோர் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பழையனுர் போலீசார் வழக்கு பதிந்து இருதரப்பைச் சேர்ந்த 38 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மோதல் தொடர்பாக எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில்சிலர் பதிவேற்றியுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories