Asianet News TamilAsianet News Tamil

பள்ளி மாணவிகள் உயிரிழந்த விவகாரம்; பெற்றோரின் காலில் விழுந்த தலைமை ஆசிரியை

புதுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் முறையிட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு பள்ளி விளையாட்டு போட்டிக்காக திருச்சி சென்று திரும்பினர். அப்போது கரூர் மாவட்டம் மாயனூர் ஆற்றில் குளித்த போது 4 மாணவிகள் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியில் முறையிட்டனர். எங்கள் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை கூட இன்னும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

மாணவிகளின் இறப்புக்கு காரணம் தெரியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் எவ்வாறு பள்ளியை திறக்கலாம் என்று பெற்றோர் முறையிட்டனர். அப்போது பள்ளி உதவி தலைமை ஆசிரியை பெற்றோரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

Video Top Stories