Asianet News TamilAsianet News Tamil

Watch : பொன்னமராவதி அருகே மழை வேண்டி மீன்பிடித் திருவிழா! ஊர் ஒற்றுமைக்காக திரண்ட மக்கள்!

பொன்னமராவதி அருகே மழை வேண்டியும் விவசாயம் தழைக்கவும் வேண்டி மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் ஒற்றுமைக்காக திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் வற்றும் சூழலில் உள்ள பாசன‌ கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி இந்த மீன்பிடி திருவிழாவை ஊர் ஒற்றுமைக்காக நடத்துவர்.

கடந்த 15 ஆண்டுகளாக நடைபெறாமர் இருந்து மீன்பிடித் திருவிழா, இந்த ஆண்டு மழைபெய்யவும், விவசாயம் தழைக்கவும் வேண்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலையிலேயே பொதுமக்கள் கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறையில் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.



அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை சிறிய மீன்களான சிசி, போட்லா, கட்லா, விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் சிக்கின. முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியைக் காண வெளியூர் நபர்களும் கண்மாய்க்கு வந்திருந்தனர்.

Video Top Stories