தேயிலை தோட்டத்தில் ஒய்யாரமாக அமர்ந்து கம்பீரமாக போஸ் கொடுத்த சிறுத்தை; பொதுமக்கள் பீதி

உதகை நகர பகுதில் தேயிலை தோட்ட பாறையில் அமர்ந்திருந்த சிறுத்தையால் பீதியடைந்துள்ள அப்பகுதி மக்கள் அதனை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

First Published Sep 12, 2023, 6:10 PM IST | Last Updated Sep 12, 2023, 6:10 PM IST

ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் அருகே உலா வருகின்றன. இதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சிறுத்தை ஒன்று அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருந்ததைத் கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.