Asianet News TamilAsianet News Tamil

அடுத்தடுத்து இறந்த 2 புலிகள்.. உதகை அருகே தொடரும் மர்மம்.. கண்டுகொள்ளாத வனத்துறை.!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புலிகள் இறப்பதும் தொடர் கதையாகி வருகிறது,  கடந்த இரு வாரத்தில் மட்டும் 5 புலிகள் இறந்துள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள  எமரால்டு கிராமம், அருகில் உள்ள, நேரு நகர் பாலத்தில் இருந்து அவலாஞ்சி அணை, தண்ணீர் தொட்டிக்கு செல்லும் வழியில் உள்ள  ஆற்றில் மர்மமான  முறையில் இரண்டு புலிகள்  இறந்து கிடந்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர்  கெளதம்  உள்ளிட்டவன அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது இரண்டு புலிகள் சண்டையிட்டு இறந்ததா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில்  வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  ஒரே நாளில் இரண்டு புலிகள் இறந்துள்ளது விலங்கின  ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

Video Top Stories