Watch : உதகையில் சீசன் ஆரம்பம்! - விடுதிகளில் கட்டணம் அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி!

உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. சுகாதாரமற்ற உணவு, விடுதிகளில் கட்டணம் அதிகரிப்பு போன்றவை சுற்றுலா பயணிகள் அதிருப்தியடையச் செய்துள்ளது.
 

First Published Apr 20, 2023, 2:22 PM IST | Last Updated Apr 20, 2023, 2:22 PM IST

நீலகிரியில் தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் தங்கும் விடுதிகளில் கட்டணம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
பல ஓட்டல்களில் சுகாதாரமற்ற பழைய உணவுகள் வழங்க படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

கோடை சீசன் தொடங்கியுள்ளநிலையில், உதகையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்குை அதிகரித்து உள்ளது. ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்த கோடை சீசனில் விடுதி தங்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் பெரும்பாலன சுற்றுலா பயணிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.

பெரும்பாலான கடைகளில் உணவு உட்பட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பல ஓட்டல்களில் விலையேற்றப்பட்டதாலும், பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



இது ஒருபுறம் இருக்க தரமற்ற காலாவதியான உணவு பொருட்கள் பல ஓட்டல் மற்றும் கடைகளில் விற்க படுவதாக பரவலான குற்ற சாட்டுகள் எழுந்துள்ளன.

சமிபத்தில் ஊட்டில் பிரபலமான ஓட்டலில் பழைய கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்க பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்த நிலையில் இது போன்ற புகார்கள் தொடர்ந்து எழுந்து வருவது சுற்றுலா பயணிளை கவலை அடைய செய்துள்ளது.

பல ஓட்டல்களில் பல துறை அலுவலர்களுக்கு பல சலுகைகள் கிடைப்பதால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என பரவலாக கூறப்படுகிறது. தங்கும் விடுதி கட்டணங்கள் முறையில்லாமல் தான்தோன்றி தனமாக நிர்ணயிக்கின்றனர்

இதை முறை படுத்தாவிட்டால் நீலகிரி சுற்றுலா தளம் என்ற பெருமையை இழக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதார அதிகாரிகள் மற்றும் உணவுதரகட்டுபாட்டு அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு அனைத்தையும் சீர் செய்ய வேண்டும் என்பதே அனைத்து தரப்பின் கோரி்க்கையாக உள்ளது