Asianet News TamilAsianet News Tamil

பாறை இடுக்கில் சிக்கி கத்திக் கொண்டிருந்த கரடி; பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் இரு பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட கரடி வெளியில் வரமுடியாமல் கத்திக் கொண்டிருந்த நிலையில், அதனை வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமைகள் என பல வகையான காட்டு விலங்குகள் நகர பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் கீழ் கோத்தகிரி அருகே உள்ள கடக்கோடு மட்டம் பகுதியில் தாயுடன் உணவு தேடி வந்த குட்டி கரடி ஒன்று தேயிலை தோட்டத்தின் நடுவே உள்ள பாறை இடுக்கில் சிக்கியது. 

இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த வனத்துறையினர் தாய் கரடி அருகில் இருந்ததால் நெருங்க முடியாமல் இருந்தனர். பின்பு தாய் கரடியை விரட்டி விட்டு குட்டி கரடியை மீட்டு அதே பகுதியில் விடுவித்தனர். குட்டி கரடியோ நான் பிழைத்துக் கொண்டேன் என்ற எண்ணத்தில் தேயிலைச் செடிகளின் நடுவில் ஓடி சென்றது.

Video Top Stories