Watch : கோடை விடுமுறை ஆரம்பம்! உதகையில் குவியும் சுற்றுலா பயணிகள்! கலைகட்டும் காட்டேரி பூங்கா!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
 

First Published Apr 7, 2023, 4:00 PM IST | Last Updated Apr 7, 2023, 4:00 PM IST

உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேட்டுபாளையம் குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வரத்து அதிகம் காணப்படுகிறது மேலும் காட்டேரி பூங்காவில் எதிர்வரும் சீசனுக்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் பூக்கள் பூத்து குலுங்கும். இருந்தாலும் வெள்ளி சனி நாட்களில் அதிகம் சுற்றுலா பயணிகள் காட்டேரி பூங்காவிற்க்கு வருகை தருகின்றனர்,

இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் உதகை தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்காவை விட காட்டேரி பூங்கா இயற்கையாகவே மலை முகடுகள் மற்றும் அருவி மலை இரயில் பாதை மற்றும் எதிரே பச்சை பசேல் என தேயிலை தோட்டங்களும் காணப்படும் பூங்காவாகும் இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை காட்டேரி பூங்காவில் அதிகம் காணப்படுகிறது.