தனியார் விடுதிக்குள் நுழைந்து வாத்தை கவ்விச் சென்ற சிறுத்தை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் விடுதியில் வாத்தை கவ்வி சென்ற சிறுத்தை இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.

First Published Nov 3, 2023, 12:14 PM IST | Last Updated Nov 3, 2023, 12:14 PM IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்  பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் நகர் பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ள நிலையில் சமீப காலமாக கரடி, காட்டு யானைகள், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நகர் மற்றும் கிராம பகுதிகளுக்குள் உலா வரத்தொடங்கி உள்ளன.

அவ்வாறு இன்று அதிகாலை கொணவக்கரை பகுதியில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது. அப்போது தனியார் விடுதில் வளர்க்கப்பட்டு வரும் வாத்து ஒன்றை சிறுத்தை  கவ்வி செல்வது அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வனத்துறையினர் இதுபோன்ற வனவிலங்குகள் கிராம பகுதிகளில் உலா வருவதை தடுக்க பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன ரோந்து மேற்க் கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

Video Top Stories