WATCH | வெலிங்டன் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா! - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ஐயப்பன் கோவில் சிறப்பு வாய்ந்த பழமையான கோயில் ஆகும் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ஐயப்பன் கோவில் சிறப்பு வாய்ந்த பழமையான கோயில் ஆகும் ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
திங்கட்கிழமை கணபதி ஓமம் ஆரம்பிக்கப்பட்ட விழா புதன்கிழமை அஷ்ட திவ்ய மகா கணபதி ஓமம், கலச திங்கள் அதிவசம் விடர்த்தி, அதனைத் தொடர்ந்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னதானம் மற்றும் செண்டை மேளத்துடன் ஐயப்பன் திருவீதி ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பிரம்ம ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி சபரிமலை பரம்பரை தலைமை குருக்கள் பங்கேற்றார் மேலும் உஷ பூஜை உச்ச பூஜை தீப ஆராதனை உள்ளிட்டவைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனின் அருள் பெற்றுச் சென்றனர்.