நீலகிரியில் போக்கு காட்டு காட்டு யானைகள்; வனத்துறையினர் அவதி

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

First Published Jan 16, 2024, 10:20 PM IST | Last Updated Jan 16, 2024, 10:20 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் எட்டு காட்டு யானைகள் அதே பகுதியில் முகாமிட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவு, பகல் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பொங்கல் தினமான நேற்று மாலை குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தன. 

யானைகளை மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு விரட்டி விடலாம் என்ற எண்ணத்தில் இருந்த நிலையில் மீண்டும் 8 காட்டு யானைகளும் டபுள் ரோடு அருகே உள்ள மயான பூமியில் வந்து விட்டன. இதனால் வனத்துறையினர் அவதி அடைந்துள்ளனர். 

Video Top Stories