Watch : கூடலூர் அருகே சேற்றில் இறங்கி ஆட்டம் போட்ட யானைக் கூட்டம்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் சேற்றில் இறங்கி குளித்த யானைகள் ஆனந்த ஆட்டம் போட்டது.
 

First Published Aug 19, 2023, 9:26 AM IST | Last Updated Aug 19, 2023, 9:25 AM IST

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பந்தலூர் தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தேயிலை தோட்டங்களிலும் வனப்பகுதிகளிலும் கூட்டமாக வரும் யானைகள் அவ்வப்போது சிறு சிறு சேட்டைகளை செய்வது வழக்கம் இது போன்ற காட்சிகள் பெரும்பாலும் காணக் கிடைக்காதது.

அப்படி பந்தலூர் பகுதியில் குட்டியுடன் உலா வந்த யானைகள் வெப்பம் தாங்க முடியாமல் சிறிய மண்குளத்தில் தேங்கி இருந்த நீரில் இறங்கி விளையாடியது பின்பு சேற்றுடன் கூடிய தண்ணீரை தன் மீது இறைத்து சேற்று குளியல் போட்டது . பெரிய யானையுடன் குட்டி யானையும் நீண்ட நேரமாக சேற்றில் விளையாடி ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்றது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Video Top Stories