Viral : குன்னூர் அருகே பால் குடிக்க முயற்சித்த கரடியால் பரபரப்பு!!

குன்னூர் அருகே உபதலை கிராமத்தில் குடியிருப்புக்குள் நுழைந்து பால் பாக்கெட்டுகளை குடிக்க முயற்சித்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
 

First Published Sep 19, 2022, 3:38 PM IST | Last Updated Sep 19, 2022, 3:38 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள உபதலை கிராமத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புகளின் அருகே கரடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி நள்ளிரவு கிராமத்தில் உலா வந்து குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வாகனத்தின் மீது ஏறி பால் பொருட்களை சூறையாடி சென்றது.

அதேபோல் மீண்டும் குடியிருப்பின் அருகே இரவு உலா வந்த கரடி வீட்டின் நுழைவாயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பால் வாகனத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பால் பொருட்களை எடுத்து குடிக்க முயற்சித்து. இக்காட்சியானது குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை ஆய்வு செய்த பார்த்த குடியிருப்பு வாசிகள் பெரும் பீதி அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து கிராம பகுதிக்குள் குடியிருப்புகளின் அருகே உலா வரும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories