Watch : காயத்துடன் சுற்றித்திரியும் சிறுத்தை புலி! - சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி!

காலில் காயத்துடன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை புலி ...காயத்துடன் சுற்றித்திரியும் சிறுத்தைபுலிக்கு சிகிச்சையளிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி .
 

First Published Sep 21, 2022, 1:10 PM IST | Last Updated Sep 21, 2022, 1:10 PM IST

நீலகிரி மாவட்டம் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த சிறுத்தைப்புலி அப்பகுதியில் இருந்த சில நாய்களை வேட்டையாடி சென்ற நிலையில் இன்று காலை வழக்கம்போல் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது, அப்போது சிறுத்தைப்புலி காலில் காயத்துடன் நொண்டி நொண்டி குடியிருப்பு வழியாக சென்று தேயிலைத் தோட்டத்திற்கு பதுங்கி உள்ளது. இன்று காலை வீட்டின் உரிமையாளர் சிசிடிவி பதிவுகளை பார்த்தபோது சிறுத்தைப்புலி காலில் காயத்துடன் நொண்டி நொண்டி செல்வதைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி உள்ள சிறுத்தை புலிக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

Video Top Stories