சுற்றுலா பயணிகளை கவரும் உதகை.. உதகையில் கேரள ஓவியர்களின் ஓவிய கண்காட்சி
உதகையில் சுற்றுலா பயணிகளை கவர கேரள ஓவியர்களின் ஓவிய கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், என்றாலே பலருக்கும் நியாபகம் வருவது சுற்றுலா தலம் என்பதுதான். நீலகிரியில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவர சுற்றுலாத்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்புகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் உதகையில் உள்ள சோலோ ஆர்ட் கேலரியின் சார்பாக சேரிங்கிராசில் ஓவிய கண்காட்சி துவங்கி உள்ளது.
பொங்கல் வரை நடை பெற உள்ள இந்த கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக முழுக்க முழுக்க கேரள ஓவிய கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. மாடர்ன் ஆர்ட், அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட், கான்டெம்பரி ஆர்ட் என பல்வேறு ஓவியங்கள் முழுக்க முழுக்க கேரளாவை காட்சி படுத்தும் விதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..ஒரு நபரின் கையில் ஒட்டுமொத்த திரையரங்குகளா? உதயநிதி ஸ்டாலினை சீண்டிய திருமாவளவன்.. பயங்கர ட்விஸ்ட்!!
இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!