மேட்டுப்பாளையம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த சிலிண்டர் லாரி; வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓட்டம்

குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

First Published Dec 12, 2023, 7:50 PM IST | Last Updated Dec 12, 2023, 7:50 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பரலியார் அருகே உதகையில் இருந்து காலி எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றுக்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராத விதமாக பின் சக்கரத்தில் தீ பிடித்தது. 

இதில் லாரி முழுவதும் தீ பற்றி மலமலவன எரியத் தொடங்கியது. தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories