இது என்ன உங்க அப்பா வீட்டு வண்டியா? கைக்குழந்தையுடன் நின்ற பெண் பயணியிடம் அரசு பேருந்து ஓட்டுநர் திமிர் பேச்சு
கூடலூர் பகுதியில் கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றுது குறித்து கேள்வி எழுப்பியதற்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து அய்யன் கொல்லிக்கு செல்லும் அரசுப் பேருந்தை பேருந்து நிறுத்த்தில் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் நிறுத்த முயற்சித்துள்ளார். பெண் பயணி கை காண்பித்தும் பேருந்து நிற்காமல் சென்றதால் அந்த பயணியால் பேருந்தில் ஏற முடியவில்லை.
பின்னர் மாற்று வாகனத்தில் பேருந்து நிலையத்தை வந்தடைந்த பயணி சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநரிடம் கை காண்பித்தும், நிறுத்தாமல் சென்றது ஏன் என கேள்வி கேட்டு முறையிட்டார். அதற்கு கை காட்டினால் நிப்பாட்ட இது என்ன உங்க அப்பா வீட்டு பஸ்சா என அடாவடியாக பதில் அளித்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.