Watch : நாகையில் பதுக்கிவைக்கப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்! கடத்தல் கும்பலுக்கு வலைவீச்சு!
நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல் பரிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய கடத்தல் கும்பலுக்கு கியூ பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகை கீரை கொள்ளை தெருவில் முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நாகை கடலோர காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடலோர காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் சென்ற காவலர்கள் குடோனில் சோதனை மேற்கொண்டனர். போலீசாரை கண்டவுடன் அங்கிருந்த கடத்தல் கும்பல் தப்பியோடிய நிலையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான 526 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகளை கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.