ரோந்து சென்ற டிஎஸ்பி; தலைதெறிக்க ஓட்டம் பிடித்த குடிமகன்கள் - நாகையில் பரபரப்பு

நாகை துறைமுகம் அருகே ரோந்து சென்ற டிஎஸ்பியை பார்த்து அப்பகுதியில் மது அருந்திக் கொண்டு இருந்த நபர்கள் ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

First Published Oct 12, 2023, 5:52 PM IST | Last Updated Oct 12, 2023, 5:52 PM IST

நாகப்பட்டினம் நகரப் பகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு  இடங்களில் இன்று நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில்‌ ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை துறைமுகம் அருகாமையில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கிய  பலர் அங்குள்ள பெட்டிக்கடை அருகே நின்று மது அருந்தி உள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குறிப்பாக திறந்த வெளியில் ‌மது அருந்துவதை கண்ட டி எஸ் பி வாகனத்தை விட்டு உடனடியாக இறங்கியுள்ளார்.

இதனை கண்ட குடிமகன்கள்  அங்கிருந்து  நாலா பக்கமும் தலை தெரிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும் குடிமகன்கள் சிலர்  பதற்றத்தில் மதுபான பாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்த நிலையில் அதனை கைப்பற்றிய போலீசார் தரையில் கொட்டி அதனை அழித்தனர். பார் செயல்பட அனுமதி இல்லாத நிலையில் அங்குள்ள பெட்டிக்கடையை பார் போல குடிமகன்கள் பயன்படுத்தியதால் கடை உரிமையாளரை கண்டித்ததோடு, மறுமுறை  இதே போல நடந்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

Video Top Stories